ரோஹினியிடம் மன்னிப்பு கேட்க போன் போட்ட விஜயா, பிறகு நடந்த டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
எப்போது முடியும், எப்போது முடியும் என புலம்பிய ரசிகர்களுக்கு பதிலும் வந்துவிட்டது. அதாவது சிந்தாமணி சூழ்ச்சியால் வீட்டை இழந்த அண்ணாமலையின் வீடு இப்போது மீண்டும் கிடைத்துவிட்டது.
முத்து எப்படியோ கார்களை வைத்து கடன் வாங்கி சிந்தாமணி செய்த சூழ்ச்சிகளை சமாளித்து பணத்தை கொடுத்து வீட்டை மீட்டுவிட்டார். குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு வந்து சிறப்பு பூஜை எல்லாம் செய்துள்ளனர்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், அண்ணாமலை, முத்து-மீனாவை பூஜையில் அமர வைத்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார். வக்கீல் கொடுத்த வீட்டுப் பத்திரத்தை முத்து தனது அப்பாவிடம் கொடுக்க அவரோ இது உங்களிடம் இருக்கட்டும் என்கிறார்.

ஆனால் முத்து இது உன் வீடு இந்த பத்திரம் உன்னிடமே இருக்கட்டும் பா என எமோஷ்னல் ஆகிறார். அதோடு பூஜை காட்சிகள் முடிய மனோஜ் பிரச்சனை ஆரம்பமாகிறது. அதாவது மனோஜ் பூஜையில் எல்லோரும் ஜோடியாக இருந்தார்கள், நான் மட்டும் தனியாக இருந்தேன் என விஜயாவிடம் கூறுகிறார்.
எனக்கு விவாகரத்து கிடைக்கவே கிடைக்காது போல தெரிகிறது, நீங்கள் வேறு வீடியோ பார்த்து அவளை மோசமாக திட்டிவிட்டீர்கள், நீங்கள் அதற்காக மன்னிப்பு கேட்டால் கண்டிப்பாக விவாகரத்து கொடுத்துவிடுவாள் என்கிறார்.

உடனே விஜயா, மனோஜிடம் போன் போடு என கூறி ரோஹினியை அசிங்க அசிங்கமாக பேசி காரி துப்பி மிகவும் அசிங்கப்படுத்துகிறார்.
இந்த பிரச்சனை முடிவடைய அப்படியே மீனா அம்மா வீட்டில் சத்யா காதல் குறித்த பிரச்சனை வெடிக்கிறது. ரேகா தனது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என கூற சத்யா அவரை சமாதானப்படுத்துகிறார்.