வீடு பிரச்சனை முடிந்தது, அடுத்து முத்துவிற்கு வரப்போகும் பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல்

By Yathrika Jun 08, 2026 04:20 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

இத்தனை நாட்களாக இழு இழு என இழுத்துக் கொண்டிருந்த அண்ணாமலை வீட்டின் பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது. மனோஜ் வாங்கிய கடனுக்கு இப்போது முத்து பொறுப்பு ஏற்றுள்ளார். 

தனது பழைய முதலாளியின் கார்களை வாங்கி அதனை ரிப்பேர் செய்து அந்த கார்களை வைத்து இப்போது முத்து கடன் வாங்க அதை எப்போது அடைக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. வீட்டிற்கு வந்த விஜயா இப்போது மீண்டும் மனோஜிற்கு திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார்.

வீடு பிரச்சனை முடிந்தது, அடுத்து முத்துவிற்கு வரப்போகும் பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial June 08 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், சத்யா ரேகாவிற்காக தனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று கூறியதை கேட்டு அவரது அம்மா செம ஷாக் ஆகி திட்டுகிறார். மீனா மற்றும் அவரது அம்மா ரேகா வேண்டாம், அவர்கள் நம் குடும்பத்தையே சிதைத்துவிடுவார்கள் என கூறுகிறார்கள்.

வீடு பிரச்சனை முடிந்தது, அடுத்து முத்துவிற்கு வரப்போகும் பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial June 08 Episode

உடனே சத்யா முத்துவிடம் இந்த விஷயத்தை கூறுகிறார். உடனே முத்து, வீட்டில் ரேகாவிற்கு பிரச்சனை வந்துவிட்டது இனி சும்மா இருக்கக் கூடாது, நீ உடனே ரேகாவின் அப்பாவிடம் பேசு, அவர் கண்டிப்பாக கோபப்படுவார்.

முதலில் சொல் பின் அவர்கள் என்ன செய்கிறார்கள் பார்ப்போம் என்கிறார். சத்யாவும் முத்து சொன்னது போல் ரேகாவின் அப்பாவிடம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்கிறார். 

வீடு பிரச்சனை முடிந்தது, அடுத்து முத்துவிற்கு வரப்போகும் பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial June 08 Episode

அவர் இருவரும் காதலிப்பதை கேட்டதும் நல்லவர் போல் ரேகாவின் அப்பா ரியாக்ட் செய்கிறார். நீ சொல்வதை சொல்லிவிட்டாய், நான் யோசிக்க வேண்டும் என கூறி அனுப்பிவிடுகிறார்.

இந்த விஷயத்தை ரேகாவின் அப்பா சிந்தாமணியிடம் கூற அவர் ஒரு பிளான் போடுகிறார். இந்த விஷயத்தில் முத்துவிற்கு கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும் என்பது நன்றாக தெரிகிறது. இனி என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US