திடீரென கதறி கதறி அழும் ரோஹினி, வித்யா கூறிய ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

By Yathrika Jun 12, 2026 05:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

.வீட்டுப் பிரச்சனைக்காக போராடிய முத்து-மீனா எப்படியோ ஜெயித்துவிட்டார்கள்.

வேறு இடத்தில் கடன் வாங்கி பைனான்சியரிடம் கொடுத்து வீட்டை மீட்டு அண்ணாமலையை சந்தோஷப்படுத்திவிட்டார்கள். அந்த பிரச்சனை ஓய்ந்து நிம்மதி என நினைப்பதற்குள் இன்னொரு பிரச்சனை வந்துவிட்டது.

திடீரென கதறி கதறி அழும் ரோஹினி, வித்யா கூறிய ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial June 12 Episode

அதாவது சத்யா-ரேகா காதல் விவகாரம் பெரியதாகிவிட்டது. சத்யாவை போலீஸ் வைத்து மிரட்டி பயப்பட வைக்கலாம் என ஒரு பிளான் போட்டார், ஆனால் முத்து-மீனாவால் அது முறியடிக்கப்பட்டது.

ரேகா அவரது அப்பா வீட்டில் தான் இருக்கிறார் என தெரிந்ததும் போலீஸிடம் கூறி எப்படியோ சத்யாவை வெளியே எடுத்துவிட்டார்கள்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த முத்து மீனா சத்யா பிரச்சனை குறித்து அண்ணாமலையிடம் கூறுகிறார். பின் சத்யா-ரேகா காதலிக்கும் விஷயத்தை கூற விஜயா படு சந்தோஷம் அடைகிறார்.

திடீரென கதறி கதறி அழும் ரோஹினி, வித்யா கூறிய ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial June 12 Episode

நான் ஒரு தீர்க்கதரசி, நான் சொன்னது நடந்துவிட்டது என சந்தோஷப்படுகிறார். அவரின் அந்த பேச்சைக் கேட்டு அண்ணாமலை என்ன என்று கேட்க அதற்கு அவர், என்னிடம் மாஸ்டர் மாஸ்டர் என பழகி ஏமாற்றிய சிந்தாமணி வீட்டிற்கு சென்று ஒரு சாபம் விட்டேன்.

அதாவது இப்படி சேர்க்கும் சொத்து எல்லாம் உன் மகளுக்கு தானே, அவள் ஒன்னும் இல்லாத ஒருவனை இழுத்துக்கொண்டு ஓட போகிறாள் என சாபம் விட்டேன, அது அப்படியே நடக்கிறது என கூறுகிறார். அவர் அப்படி கூறியதும் முத்து, அண்ணாமலை செம கோபப்படுகிறார்கள்.

திடீரென கதறி கதறி அழும் ரோஹினி, வித்யா கூறிய ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial June 12 Episode

பின் அடுத்த ரோஹினி தனது வீட்டில் யாரிடமும் பேசாமல் அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருப்பதாக அவரது அம்மா வித்யாவிற்கு போன் செய்து வரவைத்து கூறுகிறார். இதனைக் கேட்ட வித்யா என்ன விஷயம் என கேட்கிறார்.

அதற்கு ரோஹினி மனோஜுடன் சேர்ந்து வாழ எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. விஜயா மனம் மாறுவது போல் தெரியவில்லை, கஷ்டமாக இருக்கிறது என கதறி கதறி அழுகிறார்.

திடீரென கதறி கதறி அழும் ரோஹினி, வித்யா கூறிய ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial June 12 Episode

அவர் அழுவதை கண்ட வித்யா, இப்படி சொன்னாலும் நீ கோபப்படுவாய், ஆனாலும் சொல்கிறேன். நீ பேசாமல் மனோஜிற்கு விவாகரத்து கொடுத்துவிடு, அதுதான் உனக்கு நல்லது என்கிறார். அவரது பேச்சை ரோஹினி கேட்பாரா அல்லது வழக்கம் போல் மனோஜ் தேடி போவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US