ரேகாவின் மோசமான நிலை சத்யா செய்யப்போவது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

By Yathrika Jun 13, 2026 05:00 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் சந்தோஷமான விஷயம் நடந்தாலும் அதேசமயம் பிரச்சனைகளும் வருகிறது.

எப்படியோ கார்களை வைத்து முத்து கடன் வாங்கி வீட்டுப் பிரச்சனையை முடித்துவிட்டார். வீட்டிற்கு வந்தவருக்கு இப்போது வேறொரு பிரச்சனை வந்துவிட்டது.

அதாவது சத்யா-ரேகா காதல் பிரச்சனை தொடங்கிவிட்டது, சத்யா ரேகா அப்பாவிடமே இந்த விஷயத்தை கூற அவர் நேரடியாக எதிர்க்காலம் பின்னால் குத்துகிறார். அவரின் கிரிமினல் பிளானிற்கு சிந்தாமணி தான் முக்கிய காரணம்.

ரேகாவின் மோசமான நிலை சத்யா செய்யப்போவது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial June 13 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், முத்து தன்னிடம் இருந்த கார்களை கொடுத்து சவாரிக்கு அனுப்புகிறார். அந்த வண்டியை ஓட்டும் ஓட்டுனர்கள் முத்துவை வீட்டில் சந்தித்து வாழ்த்துகிறார்கள். வேலை இல்லாமல் இருந்தோம் உங்களால் இப்போது நன்றாக சம்பாதிக்கிறோம் என கிடைத்த பணத்தை முத்துவிடம் கொடுக்கிறார்கள்.

வாங்கிய பணத்தில் முத்து அவர்களுக்கு போனஸ் கொடுக்கிறார், இதையெல்லாம் பார்த்த அண்ணாமலை மிகவும் சந்தோஷப்படுகிறார்.

பின் மனோஜ் ஷோரூம் மோசமாக செல்வதாக விஜயாவிடம் கூறுகிறார். அதோடு ரோஹினிக்கு பணம் கொடுக்கும் பிரச்சனையும் செல்கிறது.

ரேகாவின் மோசமான நிலை சத்யா செய்யப்போவது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial June 13 Episode

அடுத்த வாரத்திற்கான புரொமோவில், ரேகா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண முத்து-மீனா, சத்யா மருத்துவர் வேடத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ரேகா சத்யாவை சந்தித்து அழ அந்த நேரம் அவரது அப்பாவும் வருகிறார்.

இவர்களின் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரப்போகிறது என்பதை அடுத்த வாரம் காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US