சிறகடிக்க ஆசை சீரியலில் நடந்துள்ள திடீர் மாற்றம், செட் ஆகவில்லை என புலம்பும் ரசிகர்கள்... என்ன விஷயம்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷை வைத்தே கதைக்களம் கடந்த சில வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தன்னைப் பற்றிய உண்மை மனோஜ்-விஜயாவிற்கு தெரிந்தால் வீட்டைவிட்டு அனுப்பிவிடுவார்கள் என ரோஹினி மீனாவிடம் கெஞ்ச அவரும் அமைதியாக இருக்கிறார்.
க்ரிஷ்-மனோஜ் உறவு கொஞ்சம் நெருக்கமாக இருந்தால் பிரச்சனை சுலபமாக மாறிவிடும் என்ற எண்ணத்தில் ரோஹினி ஏதேதோ செய்து வருகிறார்.

மாற்றம்
இன்றைய எபிசோடில், க்ரிஷ் மனோஜிடம் தனது ரிப்போர்ட் கார்டு காட்டி கையெழுத்து போட கேட்கிறார்.
முதலில் மனோஜ் முடியாது என கூற விஜயாவிடம் கோபமாக க்ரிஷை திட்டிவிடுகிறார். அறைக்கு வந்த மனோஜை, க்ரிஷ் அம்மா ஆவி திட்டுவது போல் ரோஹினி மிரட்டுகிறார்.

இதனால் பயந்த மனோஜ் வெளியே வந்து க்ரிஷ் Report Cardல் கையெழுத்து போட்டுவிட்டு செல்கிறார். இப்போது சீரியலில் என்ன மாற்றம் என்றால் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவாவின் குரல்.
இன்றைய எபிசோடில் அவரது மாற்றப்பட்ட குரலை கேட்க ரசிகர்கள் இது அவருக்கு செட் ஆகவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.