ரோஹினி பிரச்சனையால் முத்துவை வம்பில் மாட்டிவிடும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை புரொமோ
இந்த வாரம் விஜய் டிவிக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை, காரணம் எல்லா தொடர்களிலும் விறுவிறுப்பான கதைக்களம் அமைந்துள்ளது.
அப்படி சிறகடிக்க ஆசை தொடரில் ரோஹினி மலேசியா மாமா என்று கூறி ஏமாற்றிய விஷயம் வீட்டிறகு தெரிந்தது. நேற்றைய எபிசோடில் அண்ணாமலை மற்றும் முத்து-மீனா ஆகியோர் பேச இன்றைய எபிசோடில் விஜயா ருத்ரதாண்டவம் நடத்தியுள்ளார்.
ரோஹினியை அடித்து தலையை பிடித்து வெளியே தள்ளியுள்ளார் விஜயா, வீட்டைவிட்டு வெளியே வந்த ரோஹினி தனது தோழி வித்யா வீட்டிற்கு செல்கிறார்.
இந்த பிரச்சனையில் கண்டிப்பாக அண்ணாமலை சரியான முடிவு எடுப்பார் என ரோஹினி நம்பிக்கையாக உள்ளார்.
புரொமோ
இன்றைய பரபரப்பான எபிசோட் முடிவுக்கு வர நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது.
அதில் மனோஜ் தனது நண்பருடன் பார் சென்று மது அருந்துகிறார், பின் தேவையில்லாமல் டிராபிக் போலீசிடம் வம்பை விலைக்கு வாங்குகிறார்.
இதில் முத்துவை வேறு சேர்த்துவிடுகிறார், ஏற்கெனவே அந்த போலீசுக்கும் முத்துவுக்கு வம்பு. இனி என்ன நடக்கப்போகிறதோ பொறுத்திருந்து காண்போம்.