மனோஜின் நிலைமை, கண்கலங்கிய அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி, பிரவுன் மணி வைத்து ஆடிய நாடகம் வீட்டில் தெரிந்து பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
விஜயாவால் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட ரோஹினி வித்யா வீட்டில் உள்ளார், பார்வதி வீட்டிற்கு விஜயா சென்றுவிட்டார். ஸ்ருதி-ரவிக்கு இந்த விஷயம் தெரிந்து வீட்டிற்கு வர உள்ளார்கள்.
முத்து-மீனா, அண்ணாமலை 3 பேரும் ரோஹினி வீட்டிற்கு அழைத்து வர கூறி மனோஜிடம் கூற அவரோ அம்மா சொல்லாமல் எதையும் செய்ய மாட்டேன் என்கிறார்.
புரொமோ
குடித்ததால் போலீசிடம் சிக்கிய மனோஜ் போலீஸ் நிலையம் சென்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேச அவரை சட்டை கழற்றி உட்கார வைத்துள்ளனர். அவரின் நிலைமையை கண்டு அண்ணாமலை கண்கலங்கி நிற்கிறார்.
அதோடு விரைவில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வெளியே கிளம்புகிறார், அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.