முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
அண்ணாமலை வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை, தனது 3 மகன்கள், மருமகள்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ ஆசை.
ஆனால் அவரது ஆசைக்கு நேர் எதிராக யோசிக்கும் மனைவியாக விஜயா உள்ளார். இப்போது கதையில் முக்கியமாக பார்க்கப்படும் 3 ஜோடிகளின் வாழ்க்கையிலுமே பிரச்சனைகள் இருக்கிறது. விவாகரத்து, ஜோசியம், வேறொரு தொடர்பு என ஒவ்வொரு ஜோடிக்கும் பிரச்சனை, பிரிந்து இருக்கிறார்கள்.

எபிசோட்
இன்றைய எபிசோடின் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆரம்பத்தில், மனோஜ் ஷோரூமிற்கு ரோஹினி வருகிறார். அங்கு நேற்று நடந்த சம்பவம் குறித்து இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.

பிறகு ரோஹினி ஒரு ஆர்டர் வந்துள்ளது என கூறி அந்த விவரங்களை கொடுத்துவிட்டு செல்கிறார். அடுத்து மீனா கடைக்கு சென்று முத்துவிற்கு வாழ்க்கை முன்னேற ஒரு பெரிய உதவி கிடைக்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவரின் அம்மா-அப்பா முத்து-மீனாவை சந்தித்து நன்றி கூறியதோடு ஒரு உதவி செய்கிறார்கள். அதாவது ஒரு கார்பரேட்டில் வேலை செய்கிறேன், இந்த அபார்ட்மென்டிற்கு Secretary ஆக உள்ளேன்.

நீங்கள் ஒரு வேன் வாங்கினால் நான் உங்களுக்கு நிறைய ஆர்டர் வாங்கி தருகிறேன் என கூறுகிறார். முதலில் முத்து தயங்க பின் ஒப்புக்கொள்கிறார், அந்த வாய்ப்பு நினைத்து இருவரும் செம சந்தோஷப்படுகிறார்கள்.

அடுத்து பார்வதி வீட்டிற்கு சிந்தாமணி-விஜயா வர அங்கு மனோஜிற்காக பெண் பார்க்கும் வேலைகள் நடக்கிறது. மனோஜிற்கு பெண் முடிவாகிவிட்டது என ரோஹினி வீட்டிற்கு சென்று சிந்தாமணி கூற அவர் செம கோபப்படுகிறார்.