பெண் வீட்டாரிடம் அண்ணாமலை கூறிய விஷயம், ஷாக்கான விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
3 மகன்களை பெற்றாலும் ஒரு மகனை மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அம்மாவாக இருக்கிறார் விஜயா.
ரோஹினியுடன் கண்டிப்பாக விவாகரத்து கிடைத்துவிடும் மனோஜிற்கு பெரிய பணக்கார வீட்டுப்பெண்ணை திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என மும்முரமாக அதற்கான வேலைகளை செய்கிறார் விஜயா.
தற்போது ஒரு பெரிய பணக்கார வீட்டுப்பெண்ணை பார்த்துவிட்டார். பெண் வீட்டினர் வீட்டிற்கு வரும்போது நீங்கள் இங்கே இருக்க வேண்டாம் என முத்து மற்றும் ரவியை எங்கேயாவது இருக்க கூறிவிடுகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், சத்யா ரேகாவை காதலிப்பதாக அவளிடம் இன்று கூறப்போவதாக முத்துவிடம் சொல்ல மீனா ஷாக் ஆகிறார்.
ஆனால் முத்து சத்யாவிற்கு முழு ஆதரவு தருவதாக கூறுகிறார். அடுத்து ஹோட்டலில் ரேகாவை சந்தித்த சத்யா தனது காதலை அவரிடம் கூறிவிட இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.

விஜயா வீட்டில் பெண் வீட்டார் வரப்போவதால் சந்தோஷமாக எல்லா வேலைகளையும் செய்கிறார். பெண் வீட்டினர் வந்ததும் வழக்கம் போல் விஜயா மனோஜ் பெருமையை பேச உடனே அண்ணாமலை அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டது என்கிறார்.

அவர் கூறியதை கேட்டு விஜயா செம ஷாக் ஆகிறார், பெண் வீட்டாரும் முதலில் ஷாக் ஆனார்கள். பின் அவர்கள் பெண்ணிற்கும் தோஷம் இருப்பதால் இப்படிபட்ட மாப்பிள்ளையை தான் தேடுகிறோம் என கூறி நாளை வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
பணக்கார வீட்டுப் பெண் கிடைத்ததால் விஜயா மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.