ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட்

By Yathrika Mar 16, 2026 04:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை குடும்பத்தில் மொத்தமும் பிரச்சனையாகவே உள்ளது.

அவரது 3 மகன்களும் பொண்டாட்டி இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எபிசோட்

இன்றைய எபிசோடில், மனோஜ், முத்து, ரவி 3 பேரும் மது அருந்திக்கொண்டு மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பின் விஜயா வீட்டு வேலைக்காக ஒரு பெண்ணை வீட்டிற்கு வர வைக்கிறார். அவர் விஜயாவிற்கு அடுத்தடுத்த கண்டிஷன் கூறுகிறார், சம்பளம் அதிகமாக கேட்கிறார். அடுத்தடுத்து அவர் தான் சமைப்பது குறித்து கண்டிஷன்கள் போட விஜயா-மனோஜ் ஷாக் ஆகிறார்கள்.

ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial March 16 Episode

கடைசியில் அவரை வேலைக்கே வேண்டாம் என அனுப்பிவிடுகிறார். அடுத்து ரவி ரெஸ்டாரண்டில் ஒரு புது டிஷ் சமைத்து ஸ்ருதியிடம் கொடுக்க அவர் ருசித்து பார்த்துவிட்டு இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 அந்த நேரம் பதற்றத்துடன் வந்த மீனா, இருவரிடமும் ஒரு விஷயம் கூறுகிறார். அதாவது, நீது ரெஸ்டாரன்டை மூடியது சந்தோஷம், ஆனால் இப்போது வேறு பிரச்சனையை தொடங்கியுள்ளார்.

ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial March 16 Episode

அதாவது ரவி பெயரில் ஒரு பூ கடையை திறந்துள்ளார், அதற்கு சிந்தாமணி தான் பூ சப்ளை செய்கிறாராம். இதனை கேள்விப்பட்ட ஸ்ருதி செம கோபப்பட, விஜயா சிந்தாமணி தோழி தானே அவரிடம் பேசுவோம் என்கிறார். 

இடையில் முத்து-மீனாவின் செல்ல சண்டை காட்சிகள் இடம்பெறுகின்றன.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US