க்ரிஷை வைத்த ரோஹினி போட்ட அடுத்த பிளான், அவமானப்பட்ட மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல்

By Yathrika Mar 17, 2026 08:21 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில், பெரிய பிரச்சனையாக வெடித்தது நீது செய்த விஷயம் தான்.

அதாவது நீது, ரவி பெயரில் புதிய பூக்கடையை திறந்துள்ளார், அதற்கு சிந்தாமணி தான் பூ சப்ளை செய்துள்ளார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மீனா, ரவி-ஸ்ருதியிடம் கூற அவர்கள் ஷாக் ஆகிறார்கள்.

க்ரிஷை வைத்த ரோஹினி போட்ட அடுத்த பிளான், அவமானப்பட்ட மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 17 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், விஜயாவை பார்த்து ரவி-ஸ்ருதி நீது கடை தொடங்கிய விஷயம் குறித்து கூறுகிறார்கள்.

சிந்தாமணி பூ சப்ளை செய்யும் விஷயம் கேட்டு விஜயா ஷாக் ஆகிறார், ஸ்ருதியும் அவரிடம் நீதுவிற்கு உதவ வேண்டாம் என சொல்லுங்கள் இல்லையென்றால் அவ்வளவு தான் என்று கூறிவிட்டு கிளம்புகிறார்.

க்ரிஷை வைத்த ரோஹினி போட்ட அடுத்த பிளான், அவமானப்பட்ட மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 17 Episode

விடிந்ததும் முதல் வேலையாக விஜயா பார்வதி வீட்டிற்கு செல்கிறார், அங்கு சிந்தாமணியும் உள்ளார்.

அவரிடம் நீதுவிற்கு பூ சப்ளை செய்வது குறித்து விஜயா கேட்க சிந்தாமணி ஏதோ சொல்லி அவரை சமாதானம் செய்துவிட்டார். நான் பூ தரவில்லை என்றால் வேறு யாராவது தருவார்கள்.

அதுவே நான் சப்ளை செய்தால், அவள் போடும் திட்டங்கள் என்னென்ன என்பது எனக்கு தெரியவரும், இதையெல்லாம் நான் உங்க நல்லதுக்காக தான் பண்றேன் மாஸ்டர் என சொல்ல உடனே விஜயாவும் நம்பி விடுகிறார்.

க்ரிஷை வைத்த ரோஹினி போட்ட அடுத்த பிளான், அவமானப்பட்ட மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 17 Episode

இதை வீட்டில் அனைவரிடமும் கூற யாரும் சிந்தாமணியை நம்புவதாக இல்லை.

ஷோரூமிற்கு திடிரென க்ரிஷ் நுழைந்து தனது Report Card காட்டுகிறார், அவனை பார்த்ததும் மனோஜ் மோசமாக திட்டி அவனை தள்ளிவிடுகிறார். அதனை கடைக்கு வந்தவர்கள் அனைவரும் பார்க்க ரோஹினி அதனை பயன்படுத்தி அழுகிறார்.

க்ரிஷை வைத்த ரோஹினி போட்ட அடுத்த பிளான், அவமானப்பட்ட மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 17 Episode

உனது அப்பாவிற்கு நம்மை கண்டாலே பிடிக்கவில்லை என அழுது புலம்ப அங்கிருந்தவர்கள் என்ன மனிஷன் இவன் என அவமானப்படுத்தகிறார்கள், கடையை விட்டு கிளம்பிவிடுகிறார்கள். ரோஹினியின் இந்த செயல் மனோஜை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது, வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை கூறுகிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US