சிந்தாமணி மகள் ரேகா என தெரிந்ததும் மீனா செய்த விஷயம், ரோஹினி போட்ட பிளான்... சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை சீரியலில் பூ சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துவிட்டது. இதில் மீனா ஜெயித்துவிட்டார், அவரை எப்படியாவது அந்த பதவியில் இருந்து தூக்கிவிட வேண்டும் என சிந்தாமணி அடுத்த பிளானிற்கு தயாராகிவிட்டார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், சிந்தாமணிக்கு தனது மகள் ரேகா, மீனாவின் தம்பி சத்யாவை காதலிக்கிறார் என்பது தெரிய வருகிறது. அதேபோல் ரேகாவும் முத்து மற்றும் மீனாவை சந்தித்து தான் சிந்தாமணி மகள் என்பதை கூறுகிறார்.

இதைக்கேட்டதும் பதறிய மீனா, அச்சச்சோ இப்படியே நிறுத்திவிடுங்கள், இருவரும் இனி உங்கள் காதலை தொடர வேண்டாம்.
ஏன் பதறுகிறாய் என முத்து கேட்க உடனே மீனா, சிந்தாமணி எப்படிபட்ட நபர், என்னை கத்தியால் குத்த வைத்தவர், நாளைக்கு அவரால் சத்யாவிற்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்கிறார்.

ஆனால் முத்து உடனே இதில் எந்த முடிவும் எடுக்க வேண்டும், பொறுமையாக இருப்போம் என்கிறார். இன்னொரு பக்கம் ரோஹினிக்கு அமெரிக்க பெண்ணுடன் மனோஜ் நிச்சயதார்த்தம் முடிந்தது பற்றி தெரிய வருகிறது.
உடனே அவர் ஒரு பிளான் போட்டு அந்த பெண்ணை தன் பார்லருக்கு வர வைத்து நாடகம் போடுகிறார்.
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu