சிறகடிக்க ஆசை சீரியல்: அம்மனாக நடித்து திருடியை பிடித்த மீனா.. முத்துவால் வெளிவந்த உண்மை..

By Kathick Mar 25, 2026 03:45 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சீதாவின் தாலியை திருடிய திருடியை பிடிக்க முத்துவும் மீனாவும் மாறுவேடம்போட்டு நகையை உருக்கும் இடத்திற்கு சென்றிருந்தனர்.

சிறகடிக்க ஆசை சீரியல்: அம்மனாக நடித்து திருடியை பிடித்த மீனா.. முத்துவால் வெளிவந்த உண்மை.. | Siragadikka Aasai Serial March 25 Episode

அந்த நேரத்தில் அங்கு போலீஸ் வர, இவர்கள் இருவரும் திருடர்கள் என தவறாக நினைத்துக்கொண்டு முத்து - மீனா இருவரையும் கைது செய்துவிட்டனர். இதன்பின், ஸ்ருதி, ரவி மற்றும் அண்ணாமலை மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, முத்து - மீனாவை பற்றி கூற, அவர்களை விடுவித்தனர்.

திருடியை பிடித்த மீனா - முத்து

இதன்பின், அந்த திருடியை பிடிக்க மீண்டும் அதே இடத்திற்கு முத்து - மீனா செல்ல, அங்கு அந்த திருடி வருகிறாள். அப்போது, சாதுர்யமாக பிளான் போட்ட முத்து, மீனாவிற்கு சாமி வந்துவிட்டதுபோல், அம்மனாக நடிக்க வைத்து, திருடியிடம் இருந்த தங்க நகைகளையும், குறிப்பாக சீதாவின் தாலியையும் வாங்கிவிட்டார்.

சிறகடிக்க ஆசை சீரியல்: அம்மனாக நடித்து திருடியை பிடித்த மீனா.. முத்துவால் வெளிவந்த உண்மை.. | Siragadikka Aasai Serial March 25 Episode

அறிவுக்கரசிக்கு பளார்.. ஈஸ்வரி பற்றி சொன்னதும் அலறிய குணசேகரன்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

அறிவுக்கரசிக்கு பளார்.. ஈஸ்வரி பற்றி சொன்னதும் அலறிய குணசேகரன்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

அந்த திருடியை வீட்டிற்கு அழைத்து வந்து, இந்த திருடிதான் அன்று சாமியாராக வந்து பொய்யான வாக்கு சொல்லி மீனாவை வீட்டை விட்டு அனுப்பியது என உண்மையை வெளிக்கொண்டு வருகிறார் முத்து.

சிறகடிக்க ஆசை சீரியல்: அம்மனாக நடித்து திருடியை பிடித்த மீனா.. முத்துவால் வெளிவந்த உண்மை.. | Siragadikka Aasai Serial March 25 Episode

இதன்பின், யார் உன்னை அப்படி சொல்ல சொன்னது என விஜயா கேட்க, சிந்தாமணியின் பெயரை சொல்லாமல், ரோகிணியின் பெயரை சொல்லிவிட்டார் அந்த திருடி. இப்படி செய்ய சொன்னது ரோகிணியா என அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US