அண்ணாமலை, மனோஜ் என குடும்பமே செய்த செயலால் வருத்தத்தில் விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் கூட்டுக் குடும்பமாக இருக்க ஆசைப்படும் அண்ணாமலையின் குடும்ப கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் மனோஜ்-ரோஹினிக்கு விவாகரத்து கிடைக்குமா, ரவி-ஸ்ருதி இணைவார்களா, மீனா மீண்டும் வீட்டிற்கு வருவாரா என பல கேள்விகளுடன் இந்த சீரியல் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில், ஸ்ருதி எனக்கு நீங்கள் வீட்டை விட்டு வெளியேறியதற்கு காரணம் என்னமோ ரோஹினி தான் எனக்கு தோன்றுகிறது. நான் வெளியே வந்தேன் நீங்கள் மட்டும் எப்படி வீட்டில் இருக்க முடியும் என்ற எண்ணம் ரோஹினிக்கு கண்டிப்பாக இருக்கும் என கூறினார்.
உடனே மீனாவிற்கும் சந்தேகம் வர இதனை முத்துவிடம் கூறுகிறார், அவரும் கண்டிப்பாக ரோஹினியாக இருக்கலாம் என யோசிக்கிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், மனோஜ் தனது நண்பனுடன் கடையில் தங்குகிறேன் என்கிறார், முத்து மீனா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். ரவி தனது நண்பன் வருகிறான் என்பதால் அவனுடன் வெளியே தங்கிக்கிறேன் என விஜயாவிற்கு போன் செய்து கூறிவிடுகிறார்.
இப்படி யாரும் வீட்டில் இல்லை என்பதால் அண்ணாமலை கவலைப்படுகிறார். அந்த நேரம் அண்ணாமலை நண்பன் பரசு வீட்டிற்கு வருகிறார், இருவரும் நாங்கள் மொட்டை மாடியில் படுத்துக்கொள்கிறோம் என கிளம்பிவிடுகிறார்கள்.

விஜயா மட்டும் தனியாக தனது வீட்டில் இருக்கிறார், யாரும் இல்லாமல் தனியாக சாப்பிட உட்காருகிறார் அப்போது குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்ட நினைவுகள் எல்லாம் அவருக்கு வருகிறது.

யாரும் இல்லாமல் வீட்டில் தனியாக இருக்கும் விஜயாவிற்கு சாப்பிடவும் பிடிக்கவில்லை, தூக்கமும் வரவில்லை. காலை விடிந்து முதல் வேலையாக பார்வதி வீட்டிற்கு சென்றுவிடுகிறார்.
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri