விவாகரத்து வழக்கில் ரோஹினியை சிக்க வைக்க மனோஜிற்கு கிடைத்த வீடியோ, ஆனால்?... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
வாரா வாரம் வரும் டிஆர்பி லிஸ்டில் விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. கடந்த சில மாதங்களுக்கு முன் கதையில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது அப்படி இல்லை, சுற்றி சுற்றி பிரச்சனையாகவே உள்ளது, அதுவும் அண்ணாமலை குடும்பத்தில் மட்டுமே நடக்கிறது.
எபிசோட்
கடைசி எபிசோடில், வீட்டில் யாருமே இல்லாமல் தனியாக தனது தனிமையை அனுபவித்துள்ளார். அப்போது குடும்பத்தினருடன் ஒன்றாக இருந்த விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்தார்.
காலை விடிந்ததுமே பார்வதி வீட்டிற்கு வந்து தனியாக இருந்ததை கூறி நீ எப்படி தனியாக இருக்கிறாயோ உன் கஷ்டம் எனக்கு நேற்று புரிந்தது என்கிறார்.
மீனாவை வீட்டைவிட்டு அனுப்பியதால் தான் உனக்கு இந்த கஷ்டம் அவளை மீண்டும் வீட்டிற்கு வரச்சொல் என பார்வதி கூற உடனே விஜயா முடியவே முடியாது என்கிறார். அப்போது ஒரு ஜோசியர் வீட்டிற்கு வர வைத்த விஜயா, மனோஜிற்காக பெண் பார்க்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்.

முத்து சம்பவம்
மீனாவின் பூக்கடைக்கு பூக்களை எடுத்துக்கொண்டு முத்து அவரது கடைக்கு செல்கிறார், அங்கு ஸ்ருதியும் வருகிறார்.

3 பேரும் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு அபார்ட்மென்டில் இருக்கும் ஒரு மனநலம் குன்றிய இளைஞர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அனைவரும் புலம்ப வைக்க முத்து எப்படியோ காப்பாற்றி விடுகிறார்.
சிக்கும் மனோஜ்
மனோஜ் ரோஹினிக்கு எதிராக ஆதாரம் திரட்ட, சந்தோஷ் ரோஹினியை காதலிப்பது போல் நடிக்க வைத்து அதை மறைந்து வீடியோவும் எடுக்கிறார். சந்தோஷிடம் தான் யோசித்து சொல்வதாக கூறிவிட்டு செல்கிறார் ரோகிணி.

அந்த நேரம் வீடியோ எடுத்த மகிழ்ச்சியில் சந்தோஷிடம் மனோஜ் பேசிக்கொண்டிருக்க அதை ரோஹினி பார்த்துவிடுகிறார். உடனே ரோஹினி மனோஜை லாக் செய்ய ஒரு பிளான் போடுகிறார், அது என்னது என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan