விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மனோஜ், சக்சஸ் ஆகும் ரோஹினி பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல்
படமோ, சீரியலோ அதற்கு மக்களின் விமர்சனங்கள் கலவையாக தான் வரும். அப்படி தான் இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் கதை குறித்து மக்களிடம் அதிகம் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஒரு குடும்பமே வீடு இல்லாமல் தனித்தனியாக எங்கேயோ சென்று வாழ்ந்து கொண்டிருக்க அந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று ஒரு நடவடிக்கையும் இல்லை.
மாறாக ஒரு மகன் ஆங்கிலம் படிக்க செல்கிறேன் என்பதும், இந்த பிரச்சனைக்கு காரணமானவர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட்டுவிட்டு அவருடனே ரொமான்ஸ் செய்வதும் என இருக்கிறார்.

எபிசோட்
ஸ்ருதி வீட்டில் நேர்ந்த அவமானம் நினைத்து அங்கு கதறி கதறி அழுத விஜயா தனது உடமைகளை எடுத்துக்கொண்டு விடிந்ததுமே மனோஜ் கடைக்கும் வந்துவிடுகிறார்.

ரோஹினியுடன் கடையில் ஜாலியாக ரொமான்ஸ் செய்த மனோஜ் கடையில் விஜயாவை பார்த்ததும் செம ஷாக் ஆகிறார். பின் என்ன ஆனது என கேட்க விஜயா அவர்களின் சாப்பாடு பிடிக்கவில்லை அதான் வந்துவிட்டேன் என முதலில் கூறுகிறார்.
இதற்கு இடையில் விஜயா Freshup ஆக சென்ற கேப்பில் ரோஹினியை கடையில் இருந்து வெளியே அனுப்பிவிடுகிறார். மனோஜ் கடையில் வசதிகள் கிடையாது நான் வேண்டுமென்றால் ஹோட்டலில் ரூம் புக் செய்து தருகிறேன் என கூற அவர் வேண்டாம் என்கிறார்.

நான் இங்கே இருந்தால் தான் கஷ்டப்படுகிறேன் என வீட்டை மீட்கும் முயற்சியில் முத்து ஈடுபடுவான் என்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் நடந்த விஷயத்தை ஸ்ருதி-ரவி அறிந்து விஜயா எங்கே என தேடுகிறார்கள், பின் முத்து-மீனாவிடம் இதுகுறித்து கூறுகிறார்கள்.