FIR போடப்போன போலீஸ் அதிகாரி, மீனா கண்டுபிடித்த உண்மை.. முத்து தப்பிப்பாரா, சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் கார் போய், லைசன்ஸும் கேன்சல் ஆகிவிட்டது.
சிட்டி செய்த வேலையால் நிஜமாகவே முத்துவின் கார் பிரேக் அறுந்து போக அதனால் காரை போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்ற அதிகாரிக்கும் விபத்து ஏற்படுகிறது. இந்த விஷயம் தெரிந்தும் டிராபிக் போலீஸ் முத்துவை ஜெயிலில் தள்ள பிளான் போடுகிறார்.
முத்துவும் தனது கார் போன வருத்தத்தில் இன்றைய எபிசோடில் குடித்துவிட்டு வருகிறார். பின் வேலை இல்லாததால் வீட்டை அவர் சுத்தம் செய்ய அதனை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார், மீனா செம கோபம் அடைகிறார்.
நாளைய எபிசோட்
அடுத்து கதைக்களத்தில் போலீஸ் நிலையத்தில் முத்து மீது FIR போடப்பட்டு ஜெயிலில் தள்ள உயர் அதிகாரி உத்தரவிடுகிறார்.
ஆனால் உடனே மீனா, கை உடைந்து காணப்படும் போலீஸை பார்த்து உங்களுக்கு உண்மை தெரியுமே சொல்லுங்கள் என்கிறார்.
நாளைய எபிசோடில் டிராபிக் போலீஸ் செய்த சூழ்ச்சி வெளிவருமா, முத்து தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.