மனோஜை அவரது மனைவியிடம் இருந்து பிரிக்க பிளான் போட்ட விஜயா... ரோஹினி போடும் திட்டம், சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சின்னத்திரை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த வார எபிசோட் புரொமோவில், மீனாவின் பணத்தை சிந்தாமணியிடம் இருந்து செம பிளான் போட்டு திரும்ப எடுத்தார் முத்து.
இன்றைய எபிசோடில், மீனாவிற்கு, ரவி-ஸ்ருதி பணம் கொடுத்த விவகாரம் பேசப்படுகிறது, அடுத்து அண்ணன்-தம்பிகள், மருமகள்கள் கூட்டணி நடக்கிறது.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ
புரொமோ
விஜயா, ரோஹினி மீது செம கோபத்தில் வீட்டில் அவரை டார்ச்சர் செய்கிறார். பின் தனது பார்வதியிடம் மனோஜ்-ரோஹினியை பிரிக்கப் போகிறேன் என கூறுகிறார்.
இதைக்கேட்ட ரோஹினி பார்வதியிடம் உங்களிடம் ஆன்ட்டி கேட்ட சாமியார் விவரத்தை எனக்கு கொடுங்கள். அவர் செய்யும் வசியம் பலிக்காமல் இருக்க நான் ஏதாவது செய்ய வேண்டும் என கோபமாக கூறுகிறார்.