ஒரு பிரச்சனையில் இருந்து தப்பித்து பெரிய தகராறில் சிக்கும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் கார் டிராபிக் போலீஸ் வண்டி மீது இடிக்க அது பெரிய பிரச்சனையாக ஓடிக் கொண்டிருக்கிறது.
உண்மையை மறைக்க வைத்து முத்துவை உள்ளே தள்ள டிராபிக் போலீஸ் பிளான் செய்ய அது மீனாவால் முறியடிக்கப்பட்டது. இன்றைய எபிசோடில் முத்து எல்லா பிரச்சனையும் முடிந்து வீட்டிற்கு வருகிறார், பின் நடந்த உண்மையை வீட்டில் அனைவரிடமும் கூறுகிறார்.
ஆனால் முத்து சாவி இருந்தால் தான் பிரேக் கட் செய்ய முடியும் வீட்டில் இருந்து தான் சென்றுள்ளது என பேசுகிறார். அப்படியே எல்லோர் மீது சந்தேகம் பாய்ந்து பேச்சு வார்த்தை நடக்கிறது.
நாளைய புரொமோ
சாவி தொலைந்த பிரச்சனை குறித்து வீட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது, முத்துவிற்கு ரோஹினிக்கு மீது கொஞ்சம் அழுத்தமாக சந்தேகம் வருகிறது.
இந்த பிரச்சனையை தாண்டி ரோஹினி இன்னொரு சிக்கலில் சிக்குகிறார்.
அதாவது சிட்டியிடம் பணத்தை கொடுத்து அந்த நகையை விஜயாவிற்கு கொடுக்க வாங்குகிறார், ஆனால் அதனால் என்ன பிரச்சனை வருமோ பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ நாளைய எபிசோடிற்கான புரொமோ,