விஜயா டார்ச்சரால் ஷாக்கிங் முடிவு எடுத்த முத்து, மனோஜின் கேவலமான பதில்... சிறகடிக்க ஆசை எபிசோட்

Report

சிறகடிக்க ஆசை

விஜயா, கடைக்கு வந்த ரோஹினியை திட்டும் காட்சிகள் இன்றும் தொடர்கிறது.

ஆம்பளை வேணும்னா வேற யாரையாவது தேடிக்க வேண்டியது தான, என் புள்ள தான் உனக்கு கிடைச்சானா, அடியே வெக்கம் கெட்டவளே நீயெல்லாம் சோத்துல உப்பு போட்டு தான சாப்பிடுற, நான் மட்டும் அங்க வந்தேன் உன்னை செருப்பாலயே அடிப்பேன் என கண்டபடி திட்டுகிறார்.

அந்த கோபத்தில் ரோஹினி சிசிடிவி கேமராவையே உடைத்துவிடுகிறார்.

விஜயா டார்ச்சரால் ஷாக்கிங் முடிவு எடுத்த முத்து, மனோஜின் கேவலமான பதில்... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial May 22 Episode

அடுத்து மருத்துவமனைக்கு ரோஹினி க்ரிஷ் அழைத்துக்கொண்டு வருகிறார், அங்கே முத்து-மீனா வருகிறார்கள். க்ரிஷ் தனக்கு தலைவலி அதான் வந்தேன் என கூற எதனால் தலைவலி என முத்து கேட்கிறார்.

அதற்கு க்ரிஷ், அம்மா பாட்டியுடன் சண்டைபோட்டால், மனோஜ் அப்பா கூட போன்ல டென்ஷனா பேசுனா தலைவலி வரும், சிந்தாமணி பாட்டி கூட பேசும்போதும் எனக்கு தலைவலிக்கும் என்கிறான்.

விஜயா டார்ச்சரால் ஷாக்கிங் முடிவு எடுத்த முத்து, மனோஜின் கேவலமான பதில்... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial May 22 Episode

மறுபுறம், மீனா அம்மா தனக்கு தெரிந்தவர்களிடம் விஜயா ஒரு கொடுமைக்கார மாமியார் என எப்போதோ கூறியது இப்போது பிரச்சனையாக அமைந்தது. இந்த விஷயத்தை வைத்து விஜயா பிரச்சனை செய்கிறார், நான் வீட்டைவிட்டு செல்கிறேன் என்கிறார்.

இதனால் முத்து எனக்கு ஒரு 2 நாள் டைம் கொடுங்கள் என்கிறார், 2 நாளைக்குள் பணத்தை எப்படி ரெடி செய்வாய், திருடுவியா என விஜயா கேட்கிறார். உடனே கோபமடைந்த முத்து எனக்கு திருடலாம் தெரியாது, உழைக்க தான் தெரியும். அப்படி இல்லை என்றால் நான் உழைத்து சம்பாதித்த 2 கார் மற்றும் 1 வேனை விற்றுவிடுகிறேன் என்கிறார்.

விஜயா டார்ச்சரால் ஷாக்கிங் முடிவு எடுத்த முத்து, மனோஜின் கேவலமான பதில்... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial May 22 Episode

அதைக்கேட்டதும் மீனா செம ஷாக் ஆகிறார், ஆனால் அப்போது கூட விஜயா மனம் வருந்தவில்லை. நாளைய எபிசோடின் புரொமோவில், ரவி மனோஜிடம் எப்படியாவது கடனை அடைக்க வேண்டும். நீ வாங்கிய கடனுக்கு முத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான், இப்போது உன்னால் எவ்வளவு தர முடியும் என கேட்கிறார்.

விஜயா டார்ச்சரால் ஷாக்கிங் முடிவு எடுத்த முத்து, மனோஜின் கேவலமான பதில்... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial May 22 Episode

அதற்கு மனோஜ் என்னால் பணம் தர முடியாது, அதான் அப்பா எனக்கு சொத்தில் பங்கு இல்லை என்று கூறிவிட்டார்ல பிறகு வீடு போனால் எனக்கு என்ன என்கிறார். அவரின் பேச்சைக் கேட்டதும் முத்து மனோஜை அடிக்க பாய்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US