கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலில் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டது.
சிறகடிக்க ஆசை சீரியல் குடும்ப பாங்கான கதை என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானது, சொந்த அம்மாவே மகனை வெறுக்கும் ஒரு கதை.
இப்போது கதையில் முத்து-மீனாவின் கார் பிரச்சனை காட்டப்பட்டது, அடுத்து சிட்டியிடம் பணத்தை கொடுத்து திருட்டு நகையை ரோஹினி வாங்கியது இடம்பெற்றது.
இன்றைய எபிசோடில் ரோஹினி, விஜயாவிடம் நகையை கொடுக்க ஆரம்பத்தில் மறுத்தவர் எபிசோட்ட கடைசியில் நகையை எடுத்துக் கொண்டார்.
நாளைய புரொமோ
கார் பிரச்சனை பரபரப்பாக செல்ல இப்போது சீதா பிரச்சனை வரும் என தெரிகிறது. அதாவது சீதா தான் காதலிப்பவரை முத்து-மீனா முன்பு கொண்டு வந்து நிறுத்துகிறார்.
சீதாவுடன் அருணை கண்ட முத்து-மீனா கடும் ஷாக் ஆகிறார்கள், இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.