எல்லா இடத்திலும் அசிங்கம், அவமானமாக உள்ளது என விஜயா எடுத்த அதிரடி முடிவு... சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை
அண்ணாமலைக்கு உயிரே வீடும், தனது குடும்பமும் தான்.
இப்போது அந்த இரண்டுமே அவரிடம் இல்லை, அதாவது வீடு அடமானத்தில் உள்ளது, இதனால் குடும்பத்தினர் பிரிந்து பிரிந்து ஒவ்வொரு இடத்தில் உள்ளனர்.
இந்த கடனுக்கு காரணமாக மனோஜ் அப்பா எனக்கு சொத்து இல்லை என்று கூறிவிட்டார், பிறகு அந்த வீடு இருந்தா என்ன போனா என்ன என கூற முத்து செம கோபமானார்.

புரொமோ
இந்த வார எபிசோட் புரொமோவில், வக்கீல் வீட்டிற்கு வந்து பைனான்சியர் உடனடியாக பணம் கட்ட வேண்டும் இல்லை என்றால் வீடு ஏலம் விடப்படும் என்கிறார். இதைக்கேட்டு அண்ணாமலை என்ன செய்வது என தெரியாமல் ஷாக்கில் உள்ளார்.

தற்போது நாளைய எபிசோடின் புரொமோவில், விஜயா அண்ணாமலையிடம் சென்று நான் வேலை செல்லப்போகிறேன், கையில் பணம் இல்லை என்றால், சொந்தமாக வேலை இல்லையெனில் யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என மீனாவின் அம்மாவை பார்த்து கூறுகிறார்.