சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் முத்துவிற்கு பிறந்தநாள்- ஸ்பெஷலாக வந்த வீடியோ இதோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா இருவரை சுற்றியே நடக்கும் இந்த கதைக்களத்தில் அடுத்தடுத்து நிறைய அதிரடி திருப்படங்கள், விறுவிறுபபு குறையாத கதைக்களம் என ஓடுகிறது.
இப்போது கதையில் ரோஹினி பார்லர் பெயர் மாறியது தெரிந்ததும் விஜயா கோபப்பட்டு அவரை செமயாக திட்டினார். இன்னொரு பக்கம் மாலை கட்டியதில் வந்த பணத்தை வைத்து மீனா, முத்துவிற்காக காரை பரிசாக கொடுத்துள்ளார்.
இதனால் அவர்கள் இருவரும் ஹேப்பி, வழக்கம் போல் மனோஜ் மற்றும் விஜயா அதில் குத்தம் கண்டுபிடித்தார்கள்.
இன்றைய கதைக்களத்தில் ஸ்ருதி அம்மா வீட்டிற்கு வர அதனால் ரோஹினிக்கு இன்னும் பெரிய தலைவலியாக அமைந்துவிட்டது.
முத்து பிறந்தநாள்
இந்த தொடரில் முத்து கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் பேராதரவை பெற்றிருப்பவர் நடிகர் வெற்றி வசந்த். இவருக்கு இன்று பிறந்தநாள், காலை முதல் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அதேபோல் விஜய் தொலைக்காட்சியும் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட அதற்கு வெற்றி நன்றி கூறியிருக்கிறார். அதோடு அவர் நடித்துள்ள புதிய பாடல் வீடியோ ஒன்றும் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.