ரோஹினி போட்ட அப்பா நாடகத்திற்கு விஜயா போட்ட கண்டிஷன்- சிறகடிக்க ஆசை புதிய புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை இப்போது தூக்கி நிறுத்திவரும் தொடர் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.
மற்ற சீரியல்களை போல கதை இழுவையாக இல்லாமல் அடுத்தடுத்த விறுவிறுப்பான கதைக்களத்துடன் அதிரடி திருப்பங்களுடன் தொடர் ஒளிபரப்பாகிறது.
இப்போது தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் நடந்த தகராறால் ஸ்ருதி-ரவி வீட்டிற்கு வராத பிரச்சனை தான் கதைக்களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
புதிய புரொமோ
இத்தனை நாட்கள் அப்பா நாடகம் போட்டுவந்த ரோஹினி முத்து செய்த பிரச்சனையால் விஜயா மறந்துவிட்டார் என நினைத்தார்.
இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் விஜயா ரோஹினியிடம் அவரது அப்பா குறித்து கேள்வி கேட்கிறார்.
ரோஹினி அழுது புலம்ப அதைப்பார்த்து விஜயா ஏமாறாமல் உன் அப்பா வரவில்லை பின் இந்த வீட்டில் உன் இடம் என்ன என்பதை நான் முடிவு செய்வேன் என கோபமாக கூறுகிறார். இதோ அந்த பரபரப்பான புரொமோ,
You May Like This Video