மனைவிக்கு ரவி, முத்து செய்த வேலை, தலையில் அடித்துக்கொள்ளும் விஜயா... சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
குடும்பம், பாசம், சண்டை, காமெடி, வெறுப்பு, பழிவாங்குதல் என எல்லாம் கலந்த கலவையாக உள்ளது சிறகடிக்க ஆசை தொடர்.
கடந்த வாரத்தில் இருந்து வீட்டில் பிரச்சனை, சண்டை, அழுகையாகவே உள்ளது. ரூம் கட்ட வேண்டும் என்று அண்ணாமலை போராட கடைசியில் இது முத்து தலையிலேயே விழுந்துவிட்டது.
மீனா எனது கணவரே சம்பாதித்து மேலே வீடு கட்டுவார் இது சபதம் என கூறுகிறார்.
இதற்காக முத்து புதிய வேலை எல்லாம் செய்கிறார். ஆனால் என்ன வேலை செய்கிறார் என்பது எல்லாம் நாளைய எபிசோடில் தெரிய வரும்.
புதிய புரொமோ
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் ரவி-ஸ்ருதிக்கு காலில் Nail Polish போட்டு விடுகிறார், அதைப்பார்த்த விஜயா ஏன் இந்த வேலையை நீ செய்துகொள்ள கூடாதா என கேட்க, புருஷன் செய்வது தான் அழகு என கூறுகிறார்.
இன்னொரு பக்கம் முத்துவும் மீனாவிற்கு கை பிடித்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்த விஜயா நான் பெத்த 3 மகன்களும் இப்படி இருக்கிறார்களே என வேதனைப்படுகிறார்.