முத்துவால் மனோஜிடம் மாட்டப்போகும் ஜீவா, பரபரப்பான கதைக்களம்- சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, எங்களுக்கு இதை பார்க்க மிகவும் ஆசை என ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு தொடர்.
முத்து மற்றும் மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு இந்த தொடர் மூலம் பெரிய ரசிகர்கள் வட்டாரம் உருவாகியுள்ளது.
தற்போது கதையில் மீனாவிற்கு புதிய பைக் வாங்கிக் கொடுத்துள்ளார் முத்து, அதோடு மனோஜின் பழைய காதலியிடம் இருந்து பணத்தை பெற ரோஹினி முயற்சி செய்து வருகிறார்.
இப்போது விஜயா, ரோஹினி அப்பா ஜெயிலில் இருந்து வெளியே வருவதற்காக பரிகாரம் செய்ய கோவிலுக்கு அழைத்து செல்கிறார்.
அடுத்த கதைக்களம்
கோவிலுக்கு குடும்பத்தை அழைத்து சென்ற விஜயா, ரோஹினியை நிறைய பரிகாரங்கள் செய்ய கூறுகிறார். அங்கு காமெடியான புரொமோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதோடு இன்றைய எபிசோட் முடிவில் முத்து காரில் வந்த ஜீவா கோவிலுக்கு வெளியே வந்து நிற்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் கோவிலுக்கு வெளியே வர அவரை பார்த்து மறைந்துகொள்கிறார் ஜீவா.
இவர்கள் பார்த்துக் கொள்வார்களா, பண பிரச்சனை முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
