சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து-மீனா இடையில் வரப்போகும் பிரச்சனை- பரபரப்பான புரொமோ, அடுத்து என்ன நடக்குமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக நிறைய புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தன. அப்படி சில மாதங்களுக்கு முன் நிறைய புதுமுகங்கள் கொண்டு ஒளிபரப்பான தொடர் தான் சிறகடிக்க ஆசை.
இதில் நாயகனாக நடிக்கும் முத்துவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அதோடு முத்து-மீனா ஜோடிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
பரபரப்பு புரொமோ
விஜய் டிவியில் TRPயில் டாப்பில் இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்து ஒரு பரபரப்பான கதைக்களம் வர இருக்கிறது.
அதாவது ரவி ஸ்ருதியை காதலிப்பதற்கு முத்து எதிர்ப்பு தெரிவிக்க அவர்களது தந்தையும் இது வேண்டாம் என கூறியிருந்தார்.
ஆனால் ரவி யாருக்கும் தெரியாமல் ஸ்ருதியை நண்பர்கள் சூழ கோவிலில் திருமணம் செய்துகொள்கிறார். அந்த காட்சிகளின் பரபரப்பான புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.
இவர்களின் திருமணத்தால் முத்து-மீனா வாழ்க்கையில் பெரிய பிரச்சனை வரப்போகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.