மீனாவிற்கு எதிராக சதி செய்த விஜயா.. அடுத்து நடந்த ட்விஸ்ட்! சிறகடிக்க ஆசை வரும் வாரம்
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யிலும் நம்பர் 1 இடத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
சிறகடிக்க ஆசையில் தற்போது மீனாவின் தொழில் ஒழித்துக்கட்ட வேண்டுமென சிந்தாமணி என்பவர் கிளம்பியுள்ளார். தொழில் தனக்கு போட்டியாக மீனா இருப்பதால் கடும் கோபத்தில் இருக்கும் சிந்தாமணி, மீனாவின் மாமியார் விஜயாவின் மூலம் தனது திட்டத்தை செயல்படுத்துகிறார்.
அடுத்த வாரம் நடக்கவிருப்பது
இந்த நிலையில், மீனாவிற்கு மிகப்பெரிய ஆர்டர் கிடைக்கிறது. இந்த சமயத்தில் விஜயாவிடம் மீனாவை வீட்டிலேயே இருக்கும்படி செய்யச்சொல்லி சிந்தாமணி கூறுகிறார். மீனாவின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என நினைத்த, தனது கையில் அடிபட்டுவிட்டதாக நாடகம் ஆடுகிறார் விஜயா.
இதனால் விஜயாவை பார்த்துக்கொள்ளும் நிலைமை மீனாவிற்கு ஏற்பட, வீட்டை விட்டு அவரால் வெளியே சென்று தனது தொழிலை கவனிக்க முடியவில்லை.
ஆனால், இந்த சமயத்தில் சாதுரியமாக யோசித்து, வீடியோ கால் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கிறார் மீனா. இதற்காக அவருக்கு பாராட்டும் கிடைக்கிறது. விஜயா செம கடுப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.