ரோஹினியை வைத்து முத்து-மீனாவை பழிவாங்க பிளான் போட்ட சிட்டி... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் ஹிட் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தொடர் தான்.
அண்ணாமலை குடும்பத்தின் கதை தான் இந்த தொடர், பெற்ற பிள்ளையையே நாசமாக போக வேண்டும் என நினைக்கும் தாயை முதலில் ஏற்றுக்கொள்ளாத மக்கள் இப்போது முத்து தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தற்போது கதையில் முத்து-மீனா செல்வம் வீட்டி பிரச்சனையால் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ரோஹினி, கிரிஷ் மற்றும் தனது அம்மாவிற்காக பணம் ஏற்பாடு செய்ய மனோஜை வித்யாவை வைத்து ஏமாற்றி பணம் பெறுகிறார்.
புரொமோ
தற்போது அடுத்த வாரத்திற்கான புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் சிட்டி, சத்யா-விஜயாவின் பணம் திருடிய விஷயத்தை ரோஹினியிடம் கூறி அந்த வீடியோ கூட முத்து மொபைலில் உள்ளது.
அது உங்கள் வீட்டில் அனைவருக்கும் தெரியும்படி செய்தால் உங்களை மிரட்டி அந்த நபரை இனி உங்கள் பக்கம் வராதவாரு நான் செய்வேன் என கூறுகிறார்.
இந்த புரொமோவை பார்க்கும் போது அடுத்து வாரம் என்ன ஆகப்போகிறதோ என்று இப்போதே ரசிகர்கள் யோசிக்கின்றனர்.