முத்துவால் ரோஹினிக்கு அடுத்த பிரச்சனை ரெடி, எப்படி சமாளிக்கப்போகிறார்... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயாவின் கலாட்டா தான் நடக்கிறது.
காரணம் மீனாவை பெரிய ஆர்டர் எடுத்த விழாவிற்கு செல்ல விடாமல் தடுக்க தனது குடும்பத்தினரை என்னென்வோ கூறி அனைவரையும் வெளியே அனுப்ப போராடுகிறார்.
ஆனால் முத்து, அண்ணாமலை அனைவருக்குமே விஜயா ஏன் இப்படி செய்கிறார் என்ற குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. எப்படியே அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தனக்கு கை வலி என மீனாவை என்னென்னவோ செய்ய கூறுகிறார்.
அடுத்த வாரம்
இப்படியே இன்றைய எபிசோட் முடிவுக்கு வர அடுத்த வார புரொமோ வந்தது. அதில் முத்து, க்ரிஷ் மற்றும் பாட்டியை பள்ளியில் சந்தித்துவிடுகிறார். அவரிடம் வந்து இங்கே வந்துவிட்டீர்களா என கேட்ட அவர் ஆமாம் க்ரிஷ் அம்மா இங்கே வந்துவிட்டார்.
அவர் தான் பள்ளியில் சேர்த்துள்ளார் என்கிறார். இந்த விஷயம் ரோஹினிக்கு தெரிய வர கடும் ஷாக் ஆகிறார். இதோ அடுத்த வார புரொமோ,