எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் முடிந்துவிட்டது.
அண்ணாமலையின் நண்பர் மகள் காதலனுடன் சென் கதையும் முத்து-மீனா அவர்களை தேடி பிரச்சனையை முடித்த கதையும் தான் ஒளிபரப்பானது. பின் இன்னொரு பக்கம் ஷோரூமில் ரோஹினி-மனோஜ் காதல் காட்சிகள் வந்தன.
அதாவது ரோஹினி, மனோஜின் பெயரை தனது கையில் பச்சைக்குத்திக்கொள்ள அதனால் அவர் அப்படியே உருகிவிடுகிறார்.
அடுத்த வாரம்
பின் அடுத்த வார புரொமோவில், அண்ணாமலை வேலைக்கு செல்கிறேன் என கிளம்ப, ரோஹினி எப்போது புதன்கிழமை தான் செல்வீர்கள் இன்று என்ன என கேட்கிறார்.
அண்ணாமலை இன்று Parents Meeting என கூறிவிட்டு செல்கிறார், முத்து-மீனா க்ரிஷை சந்திக்க பள்ளி செல்லலாமா என யோசிக்கிறார்கள்.
இதனால் எப்படி மகனுக்காக பள்ளிக்கு செல்வது என என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் ரோஹினி. இதோ அந்த புரொமோ,