சீதா விஷயத்தில் மீனாவை அடிக்க சென்ற முத்து, கெஞ்சிய அருண்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, பல நாட்களாக ஓடிக் கொண்டிருந்த முக்கிய கதைக்களம் வந்துள்ளது.
அதாவது முத்துவை பழிவாங்கி வந்த டிராகிக் போலீஸை சீதா காதலிக்கும் விஷயம் முத்து-மீனாவிற்கு தெரிய வந்துவிட்டது.
இதனால் முத்து செம கோபத்தில் உள்ளார், சீதா அம்மாவிடமும் இந்த விஷயத்தை கூறி நான் வேறு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் என கூறிவிட்டார்.
இன்றைய எபிசோடில் சீதா குறித்து மீனா-முத்து பேசும்போது ஒரு கட்டத்தில் முத்து மீனாவை அடிக்க கை ஓங்குகிறார். இன்னொரு பக்கம் சீதா இந்த விஷயங்கள் நினைத்து அழுதுகொண்டு இருக்கிறார்.
அடுத்த வாரம்
கொஞ்சம் பரபரப்பாக இன்றைய எபிசோட் முடிவடைய அடுத்த வாரத்திற்கான புரொமோ வருகிறது. அதில் அருண், நான் அந்த அளவிற்கு மோசமானவன் கிடையாது, சீதாவை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்.
இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம் என மீனாவிடம் கெஞ்சுகிறார். அருண் பேசியது குறித்து மீனா முத்துவிடம் கூற அதற்கும் கோபப்படுகிறார்.