க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என்ற ஜாலி Moodல் அண்ணாமலை மற்றும் அவரது மகன்கள் உள்ளனர்.
அவர்கள் வெளியே சென்றுவிட்டதால் 4 பேரும் சேர்ந்து சமைத்தார்கள், அதை முடித்ததும் ஒருவர் சாமான் கழுவுவது, வீட்டை பெருக்குவது, கிட்சனை க்ளீன் செய்வது என ஒரு ஒரு வேலை செய்தனர்.

இன்றைய எபிசோடில், காலையில் இருந்து வீட்டில் வேலை செய்ததால் மனோஜ், முத்து, ரவி மது அருந்த மாடிக்கு வந்துவிட்டனர். ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை திடீரென மாடிக்கு வந்துவிடுகிறார்.
பின் 4 பேரும் பொண்டாட்டி மிஸ் செய்வதை குறித்து பேசினார்கள்.
புரொமோ
இன்று சிறகடிக்க ஆசை சீரியலின் எபிசோட் ஜாலியாக சென்றது. ஆனால் அடுத்த வாரத்திற்கான ஒரு புரொமோ வெளியானது, அதைப்பார்த்து தான் அனைவரும் ஷாக்.
அதாவது, ரோஹினி தனது அம்மா, மகன் க்ரிஷுடன் சேர்ந்து திதி கொடுக்கிறார்.

அப்போது ஐயர் விவரம் கேட்க இவர் என் ஒரே பெண் ரோஹினி, இவன் எனது பேரன் என கூறுகிறார். அந்த இடத்திற்கு எதிர்ப்பாரா விதமாக வந்த மீனா அவர்களை பார்த்து செம ஷாக் ஆகிறார். ரோஹினியை பளார் என கன்னத்தில் அறைகிறார்.
