ரோஹினிக்கு அடுத்த ஆப்பு ரெடி, வெக்கப்போவது முத்து-மீனா தான்... அடுத்த வார சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை தொடரில் ஜீவாவிடம் பணம் வாங்கி கடை வாங்கிய விஷயத்தை பல நாட்களாக மனோஜ் ரோஹினி மறைக்க இப்போது வீட்டிற்கு தெரிந்துவிட்டது.
எப்படியோ கடுமையாக கோபத்தை காட்டிவந்த விஜயா மனோஜ் மற்றும் ரோஹினியை மன்னித்துவிட்டார். ஆனால் கடைசி எபிசோடில் முத்து ஒரு டுவிஸ்ட் வைத்துவிட்டார். மனோஜ் கடை ஓனராக அண்ணாமலையை மாற்றுகிறார் முத்து.
புரொமோ
இந்த வார எபிசோட் முடிவில், முத்து மீனா இருவரும் கோவிலில் ஒரு வயதான தம்பதியை மாலை மாற்ற வைத்து புகைப்படம் எடுக்கிறார்கள். பின் மீனா இவர்களை வீட்டிற்கு கூட்டி சென்று விருந்து வைக்கலாம்.
அதேசமயம் அவர்கள் மலேசியாவில் இருந்து தானே வந்துள்ளார்கள், அப்போது ரோஹினி அப்பாவை பற்றி விசாரிக்கலாம் என முத்துவிடம் கூறுகிறார்.
இதனால் மலேசியா அப்பா பிரச்சனையால் ரோஹினி இந்த வாரம் சிக்குவார் என தெரிகிறது.