வீட்டிற்கே தேடிவந்த பிரச்சனை, வசமாக சிக்கியதால் அறைக்குள்ளேயே தவிக்கும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், தனது வாழ்க்கையை மாற்ற வேண்டும், புது லைப் வேண்டும் என்று தன்னை பற்றிய உண்மையை அனைத்தையும் மறைத்து திருமணம் செய்தவர் ரோஹினி.
ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் என அவர் வாழும் வாழ்க்கை ஒரு பொய்யாகவே உள்ளது. இப்போது தான் அவர் ஜீவாவிடம் பணம் வாங்கி அதனை மறைத்து கடை வாங்கிய விஷயம் வெளியானது.
அந்த கோபத்தில் இருந்து விஜயா இப்போது தான் வெளியே வந்துள்ளார்.
அடுத்த வாரம்
இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில், சவாரி வந்த மலேசியாவில் இருந்த வந்த பெரியவர்களை தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார் முத்து.
பின் அவர் இவர்கள் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் கூற உடனே விஜயா சந்தோஷத்தில் ரோஹினியை அழைக்கிறார். வசமாக சிக்கியதால் ரோஹினி அறைக்குள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.
இதோ அடுத்த வாரத்திற்கான புரொமோ,