முத்துவிடம் மாட்டிக்கொண்ட ரோகிணி.. வெளிவருமா உண்மை! சிறகடிக்க ஆசையில் அடுத்த நடக்கப்போவது இதுதான்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தம்பியை விஜயாவிடம் மாட்டிவிட, முத்துவின் போனில் இருந்த வீடியோவை திருத்தனமாக எடுத்தார் ரோகிணி.
இதன்பின், பெரிய பிரச்சனை நடந்து, மீனாவின் தம்பி சத்யா கைது செய்யப்பட்டார். தனது போனை திருடியது யார் என கண்டுபிடிக்க முத்து முயற்சி செய்தாலும், அந்த முயற்சி அவருக்கு கைகொடுக்கவில்லை. திருடிய முத்துவின் செல்போனை கடலில் தூக்கி எறிந்துவிட்டு என, தனது தோழியிடம் கூறியிருந்தார் ரோகிணி.
அடுத்த நடக்கப்போவது..
ஆனால், ரோகிணியின் தோழி வித்யா, அந்த செல்போனை தவவிட்டுவிட்டார். அந்த செல்போன் முத்துவின் கைக்கே மீண்டும் வந்துள்ள நிலையில், இதற்கு காரணம் ரோகிணி மற்றும் வித்யா தான் என முத்து கண்டுபிடித்துவிடுகிறார்.
வித்யாவிடம் சென்று என் செல்போனை திருடியது, நீயும் ரோகிணியிடம் தானே என கேட்க, என்ன சொல்வது என தெரியாமல் திகைத்துப்போய் நிற்கிறார் வித்யா.
இதன்மூலம் ரோகிணி வசமாக சிக்குவாரா? இல்லை இதிலிருந்து சாமர்த்தியமாக தப்பித்துவிடுவார் என அடுத்தவார எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம். இதோ சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ வீடியோ..