பதற்றத்துடன் சீதா சொன்ன விஷயம், என்ன செய்வது என தெரியாமல் முத்து.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் மாஸ் காட்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வார எபிசோடில், விஜயா-ரோஹினியை பழிவாங்கும் விஷயங்கள் தான் ஒளிபரப்பானது.
முதலில் கடைக்கு போக கூடாது என சொன்னது, நீயே சமையல் செய்துகொள்ள வேண்டும் என்றது, தரையில் படு அடுத்தடுத்து கொடுமை செய்து வந்தார்.
கடைசியாக கூட ரோஹினியின் ATM கார்ட்டை வாங்கிக்கொண்டார். இனி அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
புரொமோ
இன்றைய எபிசோடில் ஏடிஎம் விஷயம் தெரிந்து அண்ணாமலை வழக்கம் போல் விஜயாவிடம் தவறு என கூற கடைசியில் ரோஹினி அனைவருக்கும் பல்ப் கொடுத்துவிட்டார்.
பின் அடுத்த வார புரொமோவில், சீதா முத்துவிற்கு போன் செய்து சத்யாவை இரவில் இருந்து காணவில்லை என கூறுகிறார்.
முத்து சத்யாவை தேட ஆரம்பிக்க, இன்னொரு பக்கம் சிட்டி சத்யாவிற்கு போதை ஊசி போடப்போவதாக கடத்தி வைத்துள்ளார். இதோ அந்த புரொமோ,