மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க சிந்தாமணிக்கு ஐடியா கொடுத்த விஜயா.. இப்படியா ஆகனும், சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் எல்லாம் ரோஹினி, மலேசியா மாமா பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருந்தது.
ரோஹினியை அடித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பி பின் பாட்டி மூலம் அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
ஆனால் கோபம் தீராத விஜயா, அவரை கடைக்கு செல்ல கூடாது என்று கூறியதோடு அவர் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என கூறிவிடுகிறார்.
விஜயா தன்னிடம் பணம் கேட்பது பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாததால் ஒப்புக்கொள்கிறார். பின் மீனா பிரச்சனை தொடங்குகிறது.
புரொமோ
புதியதாக மீனாவிற்கு ஒரு புதிய ஆர்டர் கிடைக்கிறது, அங்கு சிந்தாமணியும் போட்டிக்கு வருகிறார்.
யார் முதலில் அட்வான்ஸ் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் இந்த ஆர்டர் என கூறுகின்றனர். பின் பணம் இல்லாமல் எப்படியோ சமாளித்த பணத்தை ஏற்பாடு செய்த மீனா அண்ணாமலையிடம் கூறிவிட்டு பணம் கட்ட செல்கிறார்.
இதனை அறிந்த விஜயா, சிந்தாமணிக்கு போன் செய்து மீனா பணம் ஏற்பாடு செய்துவிட்டார் என கூற ஆட்களை வைத்து மீனாவின் பணத்தை திருடிவிடுகிறார் சிந்தாமணி.
அடுத்த வாரத்திற்கான கதைக்கள புரொமோ இதோ,