அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ
சிறகடிக்க ஆசை
முத்துவின் கார் பிரேக்கை ரோஹினி உதவியுடன் சிட்டி அறுத்து விடுகிறார்.
இதனால் முத்து கார் ஓட்டும் போது பிரேக் பிடிக்காமல் போக ஏற்கெனவே வம்பு இருக்கும் டிராபிக் போலீஸ் வண்டி மீது மோதி விடுகிறார். இதனால் முத்து கார் போலீஸால் கைப்பற்றப்பட்டு லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நடுவில் முத்து அருண் வீட்டிற்கு குடித்துவிட்டு சென்று பிரச்சனை செய்ய கைது செய்யப்படுகிறார். அந்த நேரத்தில் மீனாவிற்கு உண்மையை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது, அதனை வெளிக்கொண்டும் வருகிறார்.
புரொமோ
அடுத்த வாரத்திற்கான எபிசோட் புரொமோ வெளியாகி இருந்தது. அதில், முத்து வீட்டிற்கு வந்து எல்லா விஷயங்களையும் கூறி எனது வண்டி பிரேக் அறுக்கப்பட வேண்டும் என்றால் சாவி வேண்டும்.
அந்த சாவி இந்த வீட்டில் இருந்து தான் வெளியே போனது என கூற ரோஹினி ஷாக் ஆகிறார். பயத்தில் உளர முத்துவிடம் சிக்குகிறார், இதோ புரொமோ,