சீதாவின் திருமணத்தால் முத்து மீனா இடையே விரிசல் ஏற்படுமா! சிறகடிக்க ஆசை வரும் வார ப்ரோமோ
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இதில் கடந்த வாரம் தனது காதலனை முத்து மற்றும் மீனா இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் சீதா.
இவ்வளவு நாளாக சீதா காதலித்து வந்தது போலீஸ் அருணை தானா என தெரிந்ததும் முத்து கடும் கோபத்தில், அருணுக்கும் சீதாவிற்கு திருமணம் நடக்க கூடாது என முடிவு எடுத்துவிட்டார்.
ப்ரோமோ
ஆனால், சீதாவின் அக்கா மீனா இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதில் தவறு இல்லை என்கிற முடிவை எடுத்துள்ளார். மீனாவின் முடிவு இப்படி இருந்தாலும், முத்து சொன்னால் மட்டுமே தனது மகளை அருணுக்கு திருமணம் செய்து வைப்பேன் என சீதாவின் அம்மா கூறிவிட்டார்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..