உண்மை வெளிவந்து கைதான ரோஹினி, பாசத்தில் உருகும் விஜயா... சிறகடிக்க ஆசை அடுத்த கதைக்களம்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் பரபரப்பின் உச்சமாக இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் கதைக்களம் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
விஜயா நடனப்பள்ளியில் ஒரு காதல் ஜோடி தவறு செய்ய அதனால் பிரச்சனை ஆரம்பமானது.
தீபன் வீட்டிற்கு சென்று முத்து தான் அடியாட்களை வைத்து அடித்தார் என போலீஸ் கைது செய்ய ஆனால் ரோஹினி சொன்னதால் தான் சிட்டி ஆட்கள் அவர்களது வீட்டிற்கு சென்று அடித்தார் என தெரிய வருகிறது.
இதனால் ஜெயிலில் இருந்து முத்து வெளியே வர வீட்டிற்கு ரோஹினியை கைது செய்ய போலீஸ் அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார்கள்.
வீட்டுற்கு வந்த மீனா, எல்லா உண்மையையும் கூறி ரோஹினியை Left & Right வாங்குகிறார்.
ரோஹினி செய்த விஷயம் கேட்டு அண்ணாமலை கடும் அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்த வாரம்
இன்றைய எபிசோட் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாக அடுத்த வாரத்திற்கான எபிசோட் புரொமோ வெளியானது.
அதில் விஜயா கோவிலில் அன்னதானம் போட அங்கு எதர்சையாக சென்ற முத்து, உங்கள் கையில் நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை, எனக்கு சாப்பாடு போடுங்கள் என கூற விஜயா முகமே எமோஷ்னலாக மாறுகிறது.