முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளி செல்ல என்ன காரணம்? பரபரப்பான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை
ரோகிணியின் மகன் க்ரிஷ் வாழ்க்கை வீணாகிவிட கூடாது, அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்ல கூடாது என முத்து போராடி வருகிறார். இந்த சமயத்தில் முத்துவின் கடந்தகால வாழ்க்கையை குத்திக்காட்டி பேசிய மனோஜை அவரது தந்தை வெளுத்து வாங்கிவிட்டார்.
தொடர்ந்து முத்துவின் சிறு வயது வாழ்க்கையை பற்றி மர்மங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், அப்படி முத்துவின் கடந்தகால வாழ்க்கையில் என்னதான் நடந்தது என்பது குறித்து தற்போதுதான் சிறகடிக்க ஆசை சீரியலில் காட்ட துவங்கியுள்ளனர்.
பரபரப்பான ப்ரோமோ
இந்த நிலையில், வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் பாட்டி வீட்டில் விடப்பட்டு, மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு வரும் முத்து, தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை, பாட்டியிடம் செல்கிறேன் என அடம்பிடிக்கிறார். இதனால் முத்து மீது விஜயாவிற்கு வெறுப்பு ஏற்படுகிறது.
இந்த சமயத்தில் திடீரென போலீஸ் வந்த முத்துவை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனால், முத்துவை அழைத்து செல்ல என்ன காரணம் என தெரியவில்லை. கண்டிப்பாக இந்த வாரம் அதற்கான காரணம் வெளிவரும், பொறுத்திருந்து பார்ப்போம்.