மீனா குறித்து முத்து சொல்ல சொல்ல அசந்துபோன விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் ரோஹினி-மனோஜ் காட்சிகள் தான் அதிகம் வந்தன.
மீனா முதலில் ஸ்ருதி ரெஸ்டாரன்டில் நடந்த விஷயத்தையும் தனக்கு கிடைத்த ஆர்டர் குறித்தும் முத்துவிடம் கூறுகிறார்.

இதனால் மிகவும் சந்தோஷப்பட்ட முத்து, தானும் ஒரு கார் வாங்கி அந்த Construction முன்பு விட முயற்சிக்கிறேன், அங்கு காரில் செல்ல விரும்புவர்களும் அதில் புக் செய்யலாம், தொழில் முன்னேறும் என்றார்.
பின் மீனா, ரோஹினியை அழைத்து Building Construction குறித்தும் அவர்களிடம் இருந்த வந்த ஆஃபர் குறித்தும் கூற ரோஹினி அந்த ஓனரை கண்டிப்பாக நான் போய் சந்திக்கிறேன் என கூறுகிறார்.

ரோஹினி போய் பேசியதில் ஆர்டர் கைக்கு வர அந்த விஷயத்தை வீட்டில் கூறி சந்தோஷப்படுகிறார்.
மனோஜ் இதனால் தங்களுக்கு ரூ. 40 லட்சத்திற்கு மேல் வரும் என்கிறார்.

புரொமோ
இன்றைய எபிசோட் இப்படியே முடியவடைய நாளைய எபிசோடின் புரொமோ வருகிறது. அதில் முத்து, மீனாவிற்கு கிடைத்துள்ள ஆர்டர் குறித்து பேசுகிறார்.

அவர் ஒரு வீட்டிற்கு பூ கொடுக்க ஆரம்பித்தால் வருசத்திற்கு இத்தனை லட்சம் வரும் என ஒவ்வொன்றையும் கணக்கோடு கூற விஜயா அப்படியே வியந்து பார்க்கிறார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    