முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல்களில் ஒன்று.
கதையில் ஒரே ஒரு விஷயத்தை எதிர்ப்பார்த்து தான் ரசிகர்கள் உள்ளார்கள், அது என்னவென்றால் ரோஹினியின் மொத்த உண்மையும் எப்போது குடும்பத்திற்கு தெரியவரும் என்பது தான்.

ரோஹினியின் அப்பா மலேசியா இல்லை, அவர் பணக்காரர் இல்லை என்பது தெரிய வந்ததுமே விஜயா பெரிய பிரச்சனையே செய்தார். திருமணம் ஆகி குழந்தை பெற்றவர் என்றால் என்ன செய்வார் என்பது தான் தெரியவில்லை.

எபிசோட்
இன்றைய எபிசோடில், ரோஹினியின் உறவினர் சவாரிக்கு சென்றுள்ளார் முத்து.
அவர்கள் கோவிலுக்கு அழைத்து செல்ல கேட்க அவரும் அழைத்து செல்கிறார், அங்கு எதிர்ப்பாரா விதமாக முத்து-க்ரிஷ்-தான் சவாரி அழைத்து வந்தவர்கள் அனைவரும் உறவினர் என்பதை தெரிந்துகொள்கிறார்.

இந்த விஷயத்தை முத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கூற ரோஹினி பதற்றத்தின் உச்சத்திற்கே செல்கிறார். தனது அம்மாவிற்கு போன் செய்து இந்த சம்பவம் குறித்து கோபமாக திட்டுகிறார்.
இப்படியே இன்றைய எபிசோட் சில பரபரப்பான காட்சிகளுடன் முடிவுக்கு வருகிறது.
