கோபத்தின் உச்சத்தில் மீனா, கெஞ்சி கதறும் ரோஹினி, க்ரிஷை வீட்டிற்கு அழைத்து வந்த முத்து... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் ஒரு தொடர். ரோஹினி தன்னைப்பற்றிய உண்மையை மறைத்து தனது திருமண வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள ஏதேதோ செய்கிறார்.
பல பொய், நிறைய திருட்டுத்தன்ம் செய்து ஒவ்வொரு பிரச்சனையில் இருந்தும் தப்பிக்கும் ரோஹினி இப்போது மாட்டிக்கொண்டார். அதாவது ஊருக்கு தீபாவளி கொண்டாட அண்ணாமலை குடும்பம் சென்றுள்ளனர். அங்கு க்ரிஷ் மற்றும் அவரது பாட்டியும் பக்கத்து ஊருக்கு வருகிறார்கள்.
ரோஹினி தனது அம்மா வற்புறுத்தியதால் தனது அப்பாவிற்கு திதி கொடுக்க செல்கிறார், அந்த நேரம் மீனா வந்து வர மொத்த உண்மையையும் தெரிந்து கொள்கிறார்.

புரொமோ
இத்தனை நாள் பல உண்மையை மறைத்து அண்ணாமலை குடும்பத்தை ஏமாற்றியதற்காக மீனா செம கோபம் அடைந்து ரோஹினியை அடித்துவிடுகிறார். எவ்வளவு பொய், கண்டிப்பாக இந்த உண்மையை மற்றவர்களிடம் கூறுவேன் என்கிறார்.

இதனால் ரோஹினி, மீனா காலை பிடித்து கெஞ்சுகிறார். இன்றைய எபிசோட் இப்படி பரபரப்பான காட்சிகளுடன் முடிவடைகிறது. பின் அடுத்து சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து வந்த புதிய புரொமோவில், க்ரிஷ் பாட்டி ரோஹினி பற்றி மீனாவிற்கு தெரிந்த விஷயம் குறித்து பயப்படுகிறார்.

அந்த நேரம் முத்து வர க்ரிஷ் மற்றும் அவரது பாட்டியை வீட்டிற்கு அழைத்து வந்த ரோஹினிக்கு ஷாக் கொடுக்கிறார். இதோ புதிய புரொமோ,
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri