மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, முத்து-மீனா என்ற அழகிய ஜோடியின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் ஒரு சீரியல்.
கடந்த வார கதையில் ரோஹினி யார் என்ற முழு விவரத்தையும் மீனா தெரிந்துகொண்டு என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய்யுள்ளார். அவர் உண்மை கூறிவிட கூடாது என ஒவ்வொரு நொடியும் அவரைப்பற்றிய பயம் தான் ரோஹினிக்கு அதிகம் உள்ளது.
இதற்கு இடையில் வீட்டில் மனோஜ் புதிய ஆபிஸை திறக்க போகிறேன், கடை வியாபாரம் ரோஹினி பார்ப்பார் என பில்டப் கொடுத்து வருகிறார்.

எபிசோட்
மீனா வழக்கம் போல் உண்மை தெரிந்தும் வெளியே சொல்லாமல் இருப்பது கஷ்டமாக உள்ளது என புலம்பி வருகிறார்.
முத்து, மீனா தோழிகளிடம் சென்று அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று விசாரிக்கிறார், அவர்களும் எதுவும் தெரியவில்லை என்கின்றனர். அவருடன் இருந்த செல்வம் ஊருக்கு போய்ட்டு வந்ததில் இருந்து என்றால் அங்கே தான் ஏதோ பிரச்சனை இருந்துள்ளது என்கிறார்.

வீட்டிற்கு வந்த முத்து, பாட்டி ஊரில் தான் ஏதோ நடந்துள்ளது, ஒருமாதிரியாக இருந்தவர் பேசியதில் இருந்தே தான் மீனா இப்படி இருக்கிறார்.
உடனே ஸ்ருதி, மருத்துவர் ஒருவரிடம் சென்றால் மீனா மனதில் இருக்கும் அனைத்தையும் சொல்ல வைத்துவிடுவார் என்கிறார். அதனைக் கேட்டதும் ரோஹினி கடும் ஷாக் ஆகிறார்.