விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோஹினி, அடுத்த பிரச்சனை ரெடி.. சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் தெறிக்கும் காட்சிகளுடன் ஒளிபரப்பானது.
சீரியல் ஆரம்பத்தில் சத்யா-சீதா கலகலப்பாக பேசிக்கொள்கிறார்கள். சீதா, சத்யாவை ஜாக்கிரதையாக இருக்க கூறுகிறார், அவரோ என்னுடைய பாஸ் மகள் அவ்வளவு என கூலாக கூறுகிறார். அடுத்து மீனாவின் அம்மா வீட்டிற்கு முத்து மாலை போட்டுக்கொண்டு நண்பர்களுடன் வருகிறார்.

மீனா அவரது அம்மா அனைவரையும் பூஜைக்கு வருமாறு கேட்கிறார், அந்த நேரத்தில் அண்ணாமலையும் வீட்டிற்கு வருகிறார். அண்ணாமலை மீனாவிடம் என்ன தான் பிரச்சனை என கேட்க அவர் மீண்டும் முத்து மது அருந்தியது தான் பிரச்சனை என பொய் கூறுகிறார்.

கடைசியாக ரோஹினி, மீனாவை போன் செய்து ஒரு ரெஸ்டாரன்ட் வர கூறுகிறார். அவரிடம் வீட்டில் யாரிடமும் உண்மை கூறிவிட வேண்டாம் என சுயநலமாக பேசுகிறார், இதனால் மீனாவும் செம கோபம் அடைகிறார்.
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
புரொமோ
கடைசியில் மீனா, ரோஹினியை செமயாக வெளுத்து வாங்குவதோடு தொடர் முடிவடைந்தது. பின் நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு வந்த ரோஹினியை கோபமாக விஜயா அழைக்கிறார்.
எங்கே இன்று சென்றாய், யாரை சந்தித்தாய் என கேட்க ரோஹினி நடந்த விஷயங்களை கூறுகிறார். ஆனால் விஜயா அவர் கூறியதை கேட்டு கோபம் அடைந்து மீண்டும் பொய் கூற ஆரம்பித்துவிட்டாயா என கத்துகிறார்.
அப்படி என்ன மறைத்தார், என்ன தான் பிரச்சனை என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.

முதன்முறையாக உச்சம் தொட்ட சுவிஸ் சராசரி ஊதியம்: அதிக ஊதியம் வழங்கும் துறை எது தெரியுமா? News Lankasri
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri