பெரிய ஆர்டர் பிடித்த மருமகளுக்கு விஜயா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவால் ஒரு சந்தோஷ சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மீனாவால் ரோஹினிக்கு ஒரு ஆர்டர் கிடைக்க அவர்களுக்கு ரூ. 40 லட்சம் லாபத்தை கொடுக்கும் ஆர்டராக அமைந்துள்ளது.
இந்த விஷயத்தை ரோஹினி தன்னால் மட்டுமே கிடைத்த ஆர்டர் என கூற விஜயா அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்.
தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

இன்றைய எபிசோட்
சீரியல் இன்றைய எபிசோடில், பார்வதி யூடியூப் சேனல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதைப் பார்த்து விஜயா கோபப்படுகிறார், பின் அவர் பார்வதி, சிந்தாமணியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

என்ன காரணம் என்றால் ரோஹினி பொய் சொன்னார் என கணவன்-மனைவியை பிரித்து வைத்த விஜயா அவர்களுக்கு இப்போது சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்கிறார். சிந்தாமணி வீட்டிற்கு வந்து மனோஜ்-ரோஹினி அறையில் பூ அலங்காரம் எல்லாம் செய்கிறார்.
பின் அறையை பார்த்த மனோஜ் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். ரூ. 40 லட்சம் லாபம் கொடுத்த மருமகள், மூத்த மருமகள் நீ உன் மூலமாக தான் இந்த வீட்டிற்கு முதல் வாரிசு வரனும் என விஜயா சந்தோஷத்தில் உள்ளார்.
