ரோஹினி குறித்து மீனாவிற்கு தெரியவந்த விஷயம், பிரச்சனையாகுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் பரிகாரம் செய்கிறார்கள்.
அம்மன் போல கெட்டப்பில் விஜயா தீச்சட்டி கொண்டு செல்ல, மனோஜ் உடம்பில் வேப்பிலை கட்டிக்கொண்டு தீச்சட்டி எடுக்கிறார்.
அவர்கள் கோயிலில் தீச்செட்டி எடுத்தபோது அவர்களை வீடியோ எடுத்துவிட்டார் முத்து. அதனை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் போட்டுகாட்ட அண்ணாமலை, ரவி, ஸ்ருதி 3 பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
இப்படி கலகலப்பாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைந்துள்ளது.
நாளைய புரொமோ
இன்றைய கலகலப்பான எபிசோட் முடிவடைந்து நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது.
அதில் தனது தாலி செயினை வைத்து ரோஹினி தன்னிடம் ரூ. 2 லட்சம் கொடுத்து விஜயாவிடம் பணம் கிடைத்துவிட்டதாக கூற சொன்னார் என பார்வதி மீனாவிடம் கூறுகிறார். மீனா ரோஹினியா இப்படி செய்தார், கண்டிப்பாக தெரியுமா என கேட்கிறார்.
இந்த விஷயத்தை மீனா, முத்துவிடம் கூறுவாரா அல்லது அப்படியே விட்டுவிடுவாரா என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.