முத்து சவாரி போவதை தடுத்த சந்தோஷத்தில் ரோஹினி, ஆனால் பிரச்சனையே இனிதான்... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
அடடா என்னா வில்லத்தனம் என ரசிகர்களே திணறும் அளவிற்கு அடுத்தடுத்து வில்லங்கம் செய்து தன்னை பற்றிய உண்மை தெரிய கூடாது என போராடி வருகிறார் ரோஹினி.
சிறகடிக்க ஆசை என சீரியல் பெயர் வைத்ததற்கு பதிலாக ரோஹினியின் ஆசை என வைத்திருக்கலாம் போல் தெரிகிறது. தான் மனோஜுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நிறைய வேலைகள் செய்து வருகிறார்.

இன்றைய எபிசோட்
இன்று வரப்போகும் எபிசோடில், முத்து செல்வத்திற்கு போன் செய்து இன்று முருகன் சொன்ன சவாரிக்கு செல்ல முடியுமா என கேட்கிறார். அண்ணாமலை தனியாக இருப்பார் என்பதை அறிந்த செல்வம் இன்று ஒருநாள் தான் நாளை எனக்கு வேறொரு சவாரி உள்ளது என்கிறார்.
முத்து சரி இன்று ஒருநாள் செல் நாளை ரவியை அப்பாவுடன் இருக்க சொல்லிவிட்டு நான் செல்கிறேன் என்கிறார். பின் அண்ணாமலை மற்றும் அவரது 3 மகன்கள் சேர்ந்து வீட்டில் சமைக்கிறார்கள்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு உறவினர்கள் வர அவர்களுக்கு சமைத்த உணவுகளை பரிமாரிவிடுகிறார்கள். எபிசோட் கடைசியில் மனோஜ் பசிக்கிறது என கதறுகிறார்.
ரெசார்ட் சென்ற இடத்தில் இருந்து ரோஹினி தனது அம்மாவிற்கு போன் செய்து முதல் கணவர் உறவினருடன் முத்து சென்றானா என்பதை கேட்க சொல்கிறார். இன்று சவாரிக்கு சென்றது முத்து இல்லை செல்வம் தான் என்பதை அறிந்து ரோஹினி பெருமூச்சு விடுகிறார்.

ஆனால் நாளை முத்து சவாரிக்கு செல்வார் என்பது ரோஹினிக்கு தெரியவில்லை. அடுத்த முத்து செல்லும் போது ரோஹினி பற்றிய உண்மை அவருக்கு தெரிய வந்தாலும் வரலாம். சரி இனி என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காண்போம்.